ஆசிய அலைச்சறுக்கு போட்டி: இந்திய வீரர் ரமேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடலில் நடந்து வருகிறது.;

Update:2025-08-10 08:04 IST

கோப்புப்படம்

மாமல்லபுரம்,

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடலில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஓபன் பிரிவில் கால்இறுதியில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் ரமேஷ் புடிஹால், அரையிறுதியில் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சொந்தமாக்கினார்.

இந்தோனேசிய வீரர் பஜார் அரியனா (13.83 புள்ளி) முதலிடம் பிடித்து இறுதிப்போட்டியை எட்டினார். இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்