ஆசிய அலைச்சறுக்கு போட்டி: பதக்கம் வென்று முதல் இந்திய வீரராக வரலாறு படைத்த ரமேஷ் புடிஹால்
கொரியாவின் கனோவா ஹீஜே தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.;
மாமல்லபுரம்,
ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடலில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ரமேஷ் புடிஹால், முன்னேறி அசத்தினார். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சொந்தமாக்கினார்.
இதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரமேஷ் புடிஹால் (12.60 புள்ளிகள்) சிறப்பாக செயல்பட்டு வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரியாவின் கனோவா ஹீஜே (15.17 புள்ளிகள்) மற்றும் இந்தோனேசியாவின் பஜார் அரியானா (14.57 புள்ளிகள்) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.