கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய 17 வயது இந்திய வீராங்கனை

கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-29 16:49 IST

கோப்புப்படம் 

டொராண்டோ,

கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் அனாஹெத், மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கில்லிஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அனாஹெத் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் கில்லிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 43-வது இடத்தில் உள்ள வீராங்கனை அனாஹெத் 7-வது இடத்தில் உள்ள வீராங்கனையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் முதல் 10 வீராங்கனைக்கு எதிரான முதல் வெற்றியாகும். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 20-ம் நிலை வீராங்கனை பிரான்சின் மெலிசா ஆல்வ்ஸையும் இவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்