ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி கண்ட உன்னதி ஹூடா
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
சார்புரூக்கன்,
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட உன்னதி ஹூடா தொடரில் இருந்து வெளியேறினார்.