உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
அர்ஜூன் எரிகைசி, அரோனியனை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.;
கோவா,
11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் 5-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, முன்னாள் சாம்பியனான லெவோன் அரோனியனை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி 1-0 என்ற புள்ளி கணக்கில் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.