உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை ‘சாம்பியன்’

தமிழக வீராங்கனை அனுபமா சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.;

Update:2025-11-15 07:45 IST

சென்னை,

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனுபமா 3-2 என்ற பிரேம் கணக்கில் ஹாங்காங்கின் என்ஜி ஆன் யீயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.

அத்துடன் சென்னையை சேர்ந்த 23 வயது அனுபமா உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் 15 ரெட் வகை பந்தயத்தில் பட்டம் வென்ற முதல் இந்திய மங்கை என்ற சிறப்பையும் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்