ஜப்பான் மாஸ்டர்ஸ்: இந்திய வீரரை வீழ்த்தி நிஷிமோட்டோ இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், கென்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார்.;

Update:2025-11-16 07:15 IST

குமாமோட்டோ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், 13-ம் நிலை வீரரான கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லக்‌ஷயா  நிஷிமோட்டோ 21-19, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் லக்‌ஷயாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்