ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது.;

Update:2025-07-16 06:15 IST

கோப்புப்படம்

டோக்கியோ,

மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதலாவது சுற்றில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி, ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியை எதிர்கொண்டு ஆடியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா- சுவேதா பர்னா பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் இஷிகாவா- மைகோ கவாஜோ ஜோடியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

மேலும் செய்திகள்