நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை போராடி தோல்வி
இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், இமான் ஷகீனை எதிர்கொண்டார்.;
சிட்னி,
நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஷகீன் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை ராதிகா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 5-வது செட்டை ஷகீன் கைப்பற்றி வெற்றி பெற்றார். 61 நிமிடங்கள் போராடிய ராதிகா 8-11, 3-11, 11-4, 12-10 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார்.