பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 2-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா 'டிரா'

பிரக்ஞானந்தா, துருக்கி வீரர் குரெல் எடிஸ்சை சந்தித்தார்;

Update:2025-03-01 03:30 IST

பிராக்,

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, துருக்கி வீரர் குரெல் எடிஸ்சை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 46-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. பிரக்ஞானந்தா தனது முதல் ஆட்டத்திலும் டிரா கண்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்