புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி
இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.;
ஜெய்ப்பூர்,
12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 48-42 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது
தொடர்ந்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 37-28என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது