புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி

பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.;

Update:2025-10-23 07:54 IST

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்சை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய அரியானா 45-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 10-வது வெற்றியை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 54-24 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை துவம்சம் செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி. யோத்தாஸ் - யு மும்பா (இரவு 8.30 மணி), பாட்னா பைரட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்