புரோ கபடி லீக்: மும்பை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.;
image courtesy:twitter/@umumba
மும்பை,
புரோ கபடி லீக் தொடரில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மும்பை அணிக்காக கடந்த சீசன்களில் வீரராக களமிறங்கியுள்ளார்.
இதற்கு முன் தலைமை பயிற்சியாளராக இருந்த கோலம்ரேசா கடந்த சீசனோடு பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் புதிய பயிற்சியாளராக ராகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.