புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் பெங்களூரு அணியை வீழ்த்திய பாட்னா
பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் வழக்கமான நேர முடிவில் சமனில் முடிந்தது.;
image courtesy:twitter/@ProKabaddi
புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முடிவை கண்டறிய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பாட்னா அணி 6-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.