புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’ சுற்று: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்

இன்று நடந்து வரும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் ஆடி வருகின்றன.;

Update:2025-10-27 21:08 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் தொடரில், பிளே-ஆப் சுற்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று நடைபெற்ற பிளே ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி புள்ளிகளை குவித்தது.

இறுதியில் இந்த மோதலில் 46-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி பாட்னா அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று நடந்து வரும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் ஆடி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்