புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 10-வது தோல்வி

குஜராத் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின;

Update:2025-10-16 06:30 IST

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 42-35 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ்அணியை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது. 16-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்- யு மும்பா (இரவு 8.30 மணி), உ.பி. யோத்தாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்