புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.;

Update:2025-10-05 21:26 IST

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40-35 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்