கிராண்ட்மாஸ்டர் ஆன தமிழக வீரர் இளம் பரிதி: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இளம் பரிதிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-31 06:44 IST

சென்னை,

போஸ்னியாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த இளம் பரிதி கிராண்ட்மாஸ்டருக்குரிய 3-வது தகுதி நிலையை எட்டி இந்தியாவின் 90-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். அத்துடன் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் 16 வயதான இளம்பரிதி பெற்றார்.

இந்த நிலையில், இளம்பரிதிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கும் இந்திய சதுரங்கத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் மற்றொரு பெருமைமிக்க தருணம் இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராகவும் ஆன இளம்பரிதிக்கு வாழ்த்துக்கள்.

SDAT-ன் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் பெருமைமிக்க பயனாளியான இளம்பரியின் எதிர்கால செஸ் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறவும், இன்னும் பல வெற்றிகரமான நகர்வுகளை மேற்கொள்ளவும் வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்