அமெரிக்கா: தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக காவலர்
தங்கம் வென்று அசத்திய தேவராஜுக்கு பொதுமக்கள், காவல்துறையினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.;
கோப்புப்படம்
அலபாமா,
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தலைமை காவலை தேவராஜ் பங்கேற்றிருந்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட தேவராஜ் அபாரமாக செயல்பட்டு தங்கப்பதக்கதை வென்றார்.
இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்திய தேவராஜுக்கு பொதுமக்கள், காவல்துறையினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.