இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? - புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்

முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.;

Update:2025-10-29 15:51 IST

Image Courtesy: @ProKabaddi

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்வி கண்ட புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்