உலகக் கோப்பை ஸ்குவாஷ்: வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணி சாம்பியன்

இறுதிப்போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின.;

Update:2025-12-14 18:45 IST

சென்னை,

5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்தது.

இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் எகிப்தை சந்தித்தது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஹாங்காங்-ஜப்பான் அணிகள் இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஹாங்காங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இந்த தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதின.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகக்கோப்பை ஸ்குவாஷ் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்