உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா

2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று 54.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 5-வது இடம் பெற்றார்.;

Update:2025-09-30 05:12 IST

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்.46 பிரிவு) போட்டியில், இந்திய வீரர் ரிங்கு ஹூடா (வயது 26) கலந்து கொண்டார்.

அவர், 66.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் வெள்ளிப்பதக்கமும் (64.76 மீட்டர்), கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

3 வயதில் விபத்து ஒன்றில் இடது பக்க கையில் பாதிப்பு ஏற்பட்டபோதும், மனவுறுதியுடன் தொடர்ந்து பயிற்சி பெற்று சாதனையாளராக உருவாகி உள்ளார்.

சிறு வயதில் பள்ளி அளவில் ஓட்ட பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்த ரிங்கு, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் ஈட்டி எறிதல் பயிற்சியை பெற தாடங்கினார். 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று 54.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 5-வது இடம் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்