உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் தங்கம் வென்றார்

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் லியோன் மார்சந்த் தங்கப்பதக்கம் வென்றார்.;

Update:2025-08-01 18:36 IST

சிங்கப்பூர்,

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் எதிர்பார்த்தது போலவே ஒலிம்பிக் சாம்பியனான பிரான்ஸ் வீரர் லியோன் மார்சந்த் 1 நிமிடம் 53.68 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை ருசித்தார்.

அமெரிக்காவின் ஷேன் கேசஸ் வெள்ளிப்பதக்கமும், ஹங்கேரியின் ஹூபெர்ட் கோஸ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இவர்கள் மூன்று பேரும் அமெரிக்காவின் பிரபல நீச்சல் பயிற்சியாளர் பாப் பப்மேனிடம் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்