உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி.. வெண்கலப் பதக்கத்துக்கு மோதும் இந்திய வீராங்கனை

மற்றொரு இந்திய வீராங்கனையான ராதிகா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றினார்.;

Update:2025-09-18 06:37 IST

image courtest:PTI

ஜாக்ரெப்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் முதல் சுற்றில் 10-0 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினின் கார்லா ஜாம் சோனரையும், காலிறுதியில் 9-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் ஜின் ஜாங்கையும் வீழ்த்தினார். ஆனால் அரையிறுதியில் 3-5 என்ற புள்ளி கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான லூசியா யெபெஸ் குஸ்மானிடம் (ஈகுவடார்) தோல்வி அடைந்தார். அன்திம் அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆடுகிறார்.

மற்ற இந்திய வீராங்கனைகள் ராதிகா (68 கிலோ), ஜோதி (72 கிலோ) முதல் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்