உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்
இந்த தொடரில் இந்தியா மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.;
image courtesy:PTI
நோவி சாட்,
23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவின் நோவி சாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்க வென்று அசத்தினார்
நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றது.