ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.;

Update:2025-01-20 06:33 IST

image courtesy: AFP

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சீனாவின் சூவாய் ஜாங் உடன் ஜோடி சேர்ந்து களமிறங்கியுள்ளார்.

இதில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, டெய்லர் டவுன்சென்ட் - ஹூகோ நைஸ் இணையுடன் விளையாட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டவுன்சென்ட்- நைஸ் ஜோடி விலகியதால் ஆடாமலேயே போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்