ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஸ்வரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரெவ் ஆகியோர் மோதினர்.;
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர், ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும்.
இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரெவ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அலெக்சாண்டர் ஸ்வரெவ் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.