டென்னிஸ் போட்டியில் இருந்து கனடா வீராங்கனை ஓய்வு அறிவிப்பு
எதிர்வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.;
image courtesy:instagram/geniebouchard
ஒட்டாவா,
பிரபல டென்னிஸ் வீராங்கனையான கனடாவை சேர்ந்த ஜெனி பவுச்சார்ட் (வயது 31) டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் கனடா ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எப்போது என்று உங்களுக்குத் தெரியும். எனக்கு, இப்போதுதான். எல்லாம் தொடங்கிய இடத்திலிருந்து முடிகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
இவர் ஆடிய நாட்களில் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் சிறந்த நிலையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது ஓய்வு முடிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.