சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீராங்கனை தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.;

Update:2025-10-30 08:28 IST

சென்னை ,

2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்கள் மழையால் ஆட்டங்கள் நடக்கவில்லை.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பிரதான சுற்று வாய்ப்பை பெற்ற தமிழக வீராங்கனை மாயா ரேவதி, தெலுங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிதிபதி மோதினார்கள்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீவள்ளி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் மாயா ரேவதியை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சஹஜா யாமலபள்ளி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் பிரிஸ்கா நுக்ரோஹோவை சாய்த்தார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான குரோஷியாவின் டோனா வெகிச் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வைஷ்ணவி அத்கரை (இந்தியா) எளிதில் தோற்கடித்தார். வெகிச் அடுத்து சஹஜாவை சந்திக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்