சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட ஜாஸ்மின் பயோலினி ஜோடி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.;

Update:2025-08-17 21:10 IST

கோப்புப்படம்

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி - சாரா எர்ரானி ஜோடி, சீனாவின் குஹோ ஹன்யூ - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரோவ்னா பனோவா ஜோடியுடன் மோதியது.

இந்த மோதலில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய குஹோ ஹன்யூ - அலெக்ஸாண்ட்ரோவ்னா பனோவா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜாஸ்மின் பயோலினி - சாரா எர்ரானி ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்