சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் லோரென்சோ முசெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.;

Update:2025-08-17 14:59 IST

கோப்புப்படம்

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி - லோரென்சோ சோனேகோ ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி - நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த லோரென்சோ முசெட்டி ஜோடி, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபாரமாக செயல்பட்டது. இதன் காரணமாக 2வது மற்றும் 3வது செட்டை 6-3, 13-11 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய லோரென்சோ முசெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்