கத்தார் ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அமண்டா அனிசிமோவா
இறுதி ஆட்டத்தில் அமண்டா அனிசிமோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோத உள்ளார்.;
Image Courtesy: AFP /Amanda Anisimova
தோகா,
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோகாவில் உள்ள கலீபாவில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 2வது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமண்டா அனிசிமோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அமண்டா அனிசிமோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோத உள்ளார்.