வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

டெய்லர் பிரிட்ஸ் 2-வது சுற்றில் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார்.;

Update:2025-07-25 16:09 IST

image courtesy:twitter/@mubadalacitidc

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - மேட்டியோ அர்னால்டி (இத்தாலி) மோதினர்.

இதில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்ஸ் 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் காலிறுதியில் டேவிடோவிச் உடன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்