11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.;

Update:2025-10-13 08:32 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்