ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்


ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்
x

காரைக்கால் அரசு பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட காக்கமொழி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கிராம மக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஊழியபத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள ஆசிரியர்களிடம், மாணவர்கள் பயன்படுத்தும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Next Story