நாடாளுமன்ற தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் - கனிமொழி பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் - கனிமொழி பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2024 1:18 PM IST (Updated: 4 April 2024 1:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பதில்லை என்று தி.மு.க எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பது கிடையாது. தமிழ்நாடு மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது. இதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது. இதை பற்றி நாம் பேசினால் 'நக்சல்' என்பார்கள், ரெய்டு நடத்துவார்கள். இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தரமுடியாது என்கிறார்கள். ஆனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள். ரூ 65 ஆயிரம் கோடிக்கு மேல் கார்ப்ரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். ஆனால் விவசாயிகள் கடனை ரத்து செய்யச்சொன்னால் கேட்க மாட்டார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச்சொல்கிறார்கள். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். தன்னை கர்நாடகாகாரன் எனக்கூறிய அண்ணாமலை தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார்.


Next Story