வெற்றியை தேடும் அல்லு அர்ஜூன்


வெற்றியை தேடும் அல்லு அர்ஜூன்
x
தினத்தந்தி 29 Sep 2018 7:53 AM GMT (Updated: 29 Sep 2018 7:53 AM GMT)

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன்.

 அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இயக்குனர் விக்ரம் குமாரிடம் ஒரு கதை கேட்டு வைத்திருந்தார், அல்லு அர்ஜூன். விக்ரம் குமார், தெலுங்கில் ‘இஷ்க்’, ‘மனம்’, தமிழில் ‘24’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.

தற்போது கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், விக்ரம் குமார் படத்தில் நடிப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறாராம் அல்லு அர்ஜூன். கமர்ஷியல் வெற்றியைக் கொடுக்க அவர் தேர்வு செய்திருக்கும் இயக்குனர் திரிவிக்ரம் என்று சொல்லப்படுகிறது. 

Next Story