நடிகர் அஜித்தின் முதல் செல்பி- ரசிகர்கள் மகிழ்ச்சி


நடிகர் அஜித்தின் முதல் செல்பி- ரசிகர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 July 2019 12:21 PM GMT (Updated: 20 July 2019 12:21 PM GMT)

நடிகர் அஜித்தின் முதல் செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார்.  இன்று மாலை ஆறு மணிக்கு ‘தீ முகம்’ என்ற தீம் பாடலை வெளியிடுவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கூட்டம் கூட்டமாக தன்னை பார்க்க வந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தல அஜித் முதன் முறையாக மொபைலில் தானே செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story