ஐபிஎல்: 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி..!


image courtesy: IPL twitter via ANI
x
image courtesy: IPL twitter via ANI
தினத்தந்தி 7 May 2022 6:03 PM GMT (Updated: 7 May 2022 6:03 PM GMT)

கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இன்று 2-வதாக நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், கேப்டன் கே.எல் ராகுலும் களமிறங்கினர். ராகுல் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் முறையில் வெளியேறினார். 

எனினும், டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 50 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடாவும் தன் பங்குக்கு 41 ரன்கள் எடுத்தார். க்ருனால் பாண்ட்யா 25, பதோனி 15, ஸ்டோய்னிஸ் 28, ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய பாபா இந்திரஜித் டக் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆண்ட்ரே ரசல் 45 (19), சுனில் நரைன் 22 (12) ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து  75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

Next Story