பெற்றோரை கவனிக்காததால் ஆத்திரம் மனைவி கழுத்தை நெரித்து கொலை


பெற்றோரை கவனிக்காததால் ஆத்திரம் மனைவி கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 22 Aug 2017 10:00 PM GMT (Updated: 22 Aug 2017 9:41 PM GMT)

புனே ககன்நகர் காம்பளக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சாய்நாத் சவான் (வயது23). இவரது மனைவி மாதுரி (22). இவரது வீட்டின் அருகே சாய்நாத் சவானின் பெற்றோர் வசித்து வந்தனர்.

புனே,

கடந்த சில தினங்களாக மாதுரி கணவரின் பெற்றோரை கவனிக்காமல் அலட்சியமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இருவர்களுக்கிடையே சண்டை வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வீட்டிற்கு வந்த சாய்நாத் சவானிடம் அவரது மனைவி மாதுரி வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாய்நாத் சவான் மனைவி மாதுரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் ஹடப்சர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வீட்டிற்கு வந்து மாதுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து சாய்நாத் சவானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story