திருச்செந்தூர், புன்னக்காயல் பகுதியில் நாட்டுபடகு மீனவர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம்

திருச்செந்தூர், புன்னக்காயல் பகுதியில் நாட்டுபடகு மீனவர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Sep 2017 9:30 PM GMT (Updated: 20 Sep 2017 1:57 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், விசை படகு மீனவர்கள் தங்குகடல் மீன்பிடித்து வருவதை கண்டித்து நாட்டு படகு மீனவர்கள் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில், விசை படகு மீனவர்கள் தங்குகடல் மீன்பிடித்து வருவதை கண்டித்து நாட்டு படகு மீனவர்கள் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாட்டு படகு மீனவர்கள்...

தமிழ்நாடு மீன்பிடி கடல் ஒழுங்குமுறை சட்டத்தை மீறி விசை படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருவதை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் கடந்த 18–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3–வது நாளாக போராட்டம்

நேற்று இந்த போராட்டம் 3–வது நாளாக நீடித்தது. இதனால் திருச்செந்தூர் அடுத்துள்ள அமலிநகர், ஆலந்தலை, மனப்பாடு, பெரியதாழை, வீரபாண்டியன்பட்டினம் போன்ற ஊர்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் நேற்று 3–வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் திருச்செந்தூர் பகுதி கடற்கரைகளில் நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதே போல் புன்னகாயல் பகுதியை சேர்ந்த நாட்டு படகு மீனவர்களுக்கும் நேற்று 3–வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் புன்னகாயல் கடற்கரை பகுதியில் சுமார் 400–க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Next Story