பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் பலி


பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் பலி
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 8:20 PM GMT)

சென்னையை அடுத்த நங்கநல்லூர் இந்து காலனியை சேர்ந்தவர் ஜெயராம் மார்த்தாண்டன். இவர், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய மகன் ராஜேந்திர பரத் (வயது 24).

ஆலந்தூர்,

நேற்று முன்தினம் இவர், சென்னை தி.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பரங்கிமலை தபால் நிலையம் எதிரே சாலை வளைவில் திரும்பிய போது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வழுக்கி சாலையோரம் உள்ள நடைபாதையில் மோதியது.

இதில் ராஜேந்திர பரத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story