டெல்லியில் மார்ச் 23–ந்தேதி போராட்டம் அன்னா ஹசாரே அறிவிப்பு


டெல்லியில் மார்ச் 23–ந்தேதி போராட்டம் அன்னா ஹசாரே அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 9:29 PM GMT (Updated: 29 Nov 2017 9:29 PM GMT)

டெல்லியில் மார்ச் 23–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மும்பை,

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, நேற்று முன்தினம் தன்னுடைய சொந்த ஊரான அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது, லோக்பால் மசோதா, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லியில் மார்ச் 23–ந்தேதி (தியாகிகள் தினம்) முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

இந்த பிரச்சினைகளை மேற்கோள்காட்டி ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதியதாக கூறிய அவர், அதற்கு எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.


Next Story