கனிமொழி– ஆ.ராசா விடுதலை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

கனிமொழி– ஆ.ராசா விடுதலை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நாகர்கோவில்,

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தின் முன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் சாகுல்ஹமீது, பெஞ்சமின், நாஞ்சில் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் கோர்ட்டு முன் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ், வக்கீல்கள் உதயகுமார், மதியழகன், செல்வகுமார், லீனஸ்ராஜ், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story