குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.38 கோடி வெளிநாட்டு சிகரெட், பணம் பறிமுதல்


குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.38 கோடி வெளிநாட்டு சிகரெட், பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:59 PM GMT (Updated: 21 Aug 2018 11:59 PM GMT)

குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், பணம் ஆகியவற்றை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை முசாபிர்கானா பகுதியில் உள்ள குடோனில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று 5 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, அங்கு ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் அந்த பாக்கெட்டுகளில் 7 லட்சத்து 32 ஆயிரம் சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 7 லட்சம் ஆகும்.

இதே போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடியே 31 லட்சம் ரொக்கமும் சிக்கியது. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் வெளிநாட்டில் இருந்து சிகரெட்டுகளை மும்பைக்கு கடத்தி வந்து நாட்டின் மற்ற இடங்களுக்கு வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது. குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 3 கோடியே 38 லட்சம் ஆகும்.


Next Story