பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வேதாரண்யத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து வேதாரண்யத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், மாதர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வேதாரண்யத்தில் அனைத்து ஆசிரியர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டார செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் புயல்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் இளங்கோவன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகானந்தம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ரவி மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story