கொள்ளை வழக்கில் 2 பேர் கைது : ஆதர்வாடி ஜெயிலில் இருந்து தப்பியவர்கள்
தானே, பிவண்டி பகுதியில் உள்ள நூல் குடோனில் கடந்த 1-ந்தேதி ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நூல் பண்டல்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
தானே,
நார்போலி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், குடோனில் இருந்த நூல் பண்டல்களை கொள்ளையடித்தது சதாப் குரேஷி, சாகர் மிஸ்ரா, துலால் சவுகான், ராஜூ ஹரிஜன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில், போலீசார் நடத்திய விசாரணையில், சாகர் மிஸ்ரா மற்றும் ராஜூ ஹரிஜன் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி கல்யாணில் உள்ள ஆதார்வாடி ஜெயிலில் இருந்து தப்பிஓடியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story