ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 7:09 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலியமங்கலம்,

காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் காவிரி டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை அருகே பூண்டியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று தஞ்சை-நாகை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங் களில் விவசாயத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போலீசார், மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மாணவர்களின் திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் காரணமாக தஞ்சை-நாகை சாலையில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story