பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 80 பேர் கைது


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 80 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 6:47 PM GMT)

முத்துப்பேட்டையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய சங்க நிர்வாகிகள் யோகநாதன், குமார், சிவசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

80 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 80 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story