ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு


ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:35 PM GMT (Updated: 8 Aug 2018 11:35 PM GMT)

ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை என தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார்.

நாக்பூர்,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

வாக்காளர்கள் ஓட்டுபோடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். அவ்வாறு கட்டாயம் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பல தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தையும் தாண்டி உள்ளது. எனவே ஓட்டுபோடுவதை கட்டாயம் ஆக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. மாறாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக கூறுவதையும் ஏற்க முடியாது. எந்த ஒரு அரசியல் கட்சியின் அழுத்தத்திற்கும் தேர்தல் கமிஷன் பணிந்து விடாது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை கட்சி பாகுபாடின்றி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story